தமிழ் கவிதைகள்

களரிகள்


 
 
 
                   
எடுத்தெறியும் சொல்லில்

இழுத்தெடுக்கும் அர்த்தம்  வாழ்வை

தகர்க்கின்ற கணைகள்

உள்ளம் என்றும்

தணியாத வெள்ளம்

எதுகை மோனையெல்லாம்

எனக்கெதுக்கடி

அத்தனையும் இன்னும் என்னில்

நெருக்கடி

எதுகையும் மோனையும்

ஏட்டிக்குப் போட்டி

அத்தனையும் ஒன்றாய் தந்தது

ஓரிடி



அர்த்தங்கள் தொலைத்துவிட்ட

அதிசயப் பக்கம்

அவை அத்தனையும் தந்தது

நெஞ்சில்

ஒர் ஏக்கம்

த்னி நாடு வேண்டுமென்று

தலைகீழாய் நின்றோம்

தணலும் வேகுமென்று

வெறி வீரம்

கொண்டோம்



வேட்டி கட்டிப் பார்க்கவென்ற

வீராப்புப் பேச்சு -பாவம்

கோவணமும்

அவிழ்ந்து போன

கதி கெட்ட போக்கு

நாம் கையிழந்த கற்புக்கள்

இல்லை

கலையிழந்த

களரிகள். 
 
முல்லைக்கேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....

ஈழத்து மண்ணின் வாசங்கள் வீசும் தமிழ்க் கவிதைகளை இத் தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். என் போன்று வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு தங்கள் ஆதரவுகள் இன்றியமையாதவை. இன் முகத்துடன் உங்கள் முல்லைக்கேசனாய்...

தொடர்புகட்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *