உணர்ச்சிக் கவிதைகள்


ஈழத்தின் துன்பங்கள் வலிக்க வலிக்க எம் இனத்தின் சோகங்கள் மணக்க மணக்க பிரசவித்த முல்லைக்கேசனின் தமிழ்க் கவிதைகள் இங்கே தொகுத்து உள்ளன.

கற்பு


கலவிக்குப் பிறந்த காடையர்களே

ஜன்னல்க் கரையோரம்

தென்றலுக்காய் ஒதுங்க- என் 

நெஞ்சுக்குழியெல்லம்

கொதித்துத் 

தெறிக்கிறது - கண்மணியைக்

கண்ணிமையும்

கண்ணிமையை

என் மனமும்

மூடி திறக்கின்ற ஒறு கால்ப் 

கணக்கிடையில்

கற்பைக் கிளித்தெறிந்து

கறிக்குழம்பு வைக்கின்ற - காமச்

சக்கரங்கள்

என் வீட்டு வீதியெல்லாம்

ஊரோலம் போவதனால் - நான்

கட்டிய கீழாடை தானாய்

கசங்கிக் கிளிகிறது

செந்தணற் சூட்டில் வெதும்பிச் சிவைந்து

விட்ட 

பசுமைக் கொடியைப் போல்.                                                                                                                              முல்லைக்கேசன்
 

பருவம்

பருவமொன்று வந்தது

பஞ்சனைக்கு சென்று பக்கவாட்டில்

படுத்து கொண்டேன்

அங்கங்கள் அனைத்தையும் ஒன்றாக்கிக்

கூட்டிக் கொண்டேன்

அர்த்தம் புரியாத அற்பனாய்

உணர்ந்து கொண்டேன்

யாரையும் அணுகாத தனிமைக்கு

தள்ளிப் போனேன்

தர்க்கங்கள் விலகாமல்

தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டேன்

 

வேகம் பிறக்கப் பிறக்க


சூடு தெறிக்கத் தெறிக்க

தாகம் குறையக் குறைய

கைகள் வீரம் கொள்ள

தீயில் மாழல் போல

ஆண்மையின் ஆணி வேரை

ஆதவன் பிடுங்கிக் கொள்ள

ஆணுக்கும் தூணுக்கும்

அடியொன்று விழுந்தது போல்

அதள பாதாழத்தை அலசிக் கொண்டது போல்

அடிநெஞ்சில் நஞ்சொன்று

அப்படியே கலந்தது போல்

ஆவேசக் கைவியொன்றை

அடியெடுத்து வைப்பதற்காய்

ஆழமாய் சிந்தித்தேன்.

                                                                                                    முல்லைக்கேசன்
 

 

ஏழைகள்

நாம்

ஏழைகள் ஐயோ....!

சொந்த நாட்டிலேயே

விழைந்த காட்டில் 

தினம் உழைத்ததைத் தேடுகின்றோம்

பாவம் 

அதிகாரப் பெருவெள்ளம்

அதையெல்லம்

அடித்துச்

சென்றாதைத் அறியாமல்.                                                                                                                              முல்லைக்கேசன்
 


பழைய சோறு

பட்ட மரம் எல்லாம் கிளை

இழந்து

காற்றில்

அலைக் களிய

பசி வயிற்றைப் போக்க

எண்ணி

பழைய சோற்றை

அலையத் தேடும்

வறுமைச் சிறகணீந்த

விட்டில் பூச்சிகள்

நாம்.....!

 


                                                                                                                            முல்லைக்கேசன்
                
 
 

தலையணை

தினம் தலையணைகளுக்கு

தாலாட்டுப் பாடும்

சோம்பேறிகளே

பாவம்....!

 

 

தலையணை களையாவது

வேலை செய்ய 

விடுங்கள்.

 
                                                                                                      முல்லைக்கேசன்

 
 

 

நிசப்தம்

கிரகம் நகரும் ஓசை முதல்

அரும்பு உடையும்

நிசப்தம் வரை

லயித்து சுகிக்கின்ற- நாம்

ஏன் சாலை ஓரம்

வாடும்


 

"ஏழைத் தாயின்" குமுறல்களுக்கு

மட்டும்

காதுகளை வாடகைக்கு

விட

துளிகூட

சம்மதியோம்....!

சட்டென மறுக்கிறோம்.

 
                                                                                                முல்லைக்கேசன்
 
 

வாழ்க்கைப்பந்தயம்

ஓட்டப் பந்தயத்தில்

தினம்

தோற்றுப் போகிறோம்- காரணம்

ஆரம்பித்ததே......!

வறுமைக் கோட்டில்

இருந்து -நாம்

எப்படி முடியும்

ஓடியவர்கள் எல்லாம்       

வறுமைக் கோட்டை

அளிக்கத்தான்...

 

 

 

ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்

கோடு அளிந்த

பாடில்லை

எம் ஓடுகள் தான்

சிதைந்து  போகிறது

ஏழ்மைத் தமிழன் போல்.


                                                                                              முல்லைக்கேசன்

 


 

சாதி

சாதிச் சுடுகாட்டில்

எரிகின்ற பிணங்களின் நடுவில்

சுவாலைகளைச் சுவாசிக்க

முடியாதவனாய்

சாதியையும் எரிக்கவென்று

நண்பனின்

உடலுக்காய் உடையொன்றைப்

போடவேண்டி

சவப்பெட்டி வாங்கப்

போனேன்

கடைக்காரன் கேட்கிறான்

தம்பி நீர் என்ன சாதி....?                                                                                              முல்லைக்கேசன்

 


 

சொத்து

பழஞ்சோற்றுப் பானையிலே

குழம்பு விட்டுக் குழைக்கையிலே

கிளம்பி வரும் வாசமது

மாடி வீட்டிற்க்  எட்டிடுமோ

வெய்யோன் ஊர் வருகையிலே

ஏர் கொண்டு போகையிலே

காளையின் ஏர் கண்டுஎன்

கருமேனி

மகிழ்ந்ததாலே

தோளில் ஏரிருப்பதை மறந்தும்

 போனேன்

 

 
வண்டல் தரையினிலே

களிமண் குழையலிலே கால் வைத்து

நடக்கையிலே "".....!

"சூ" போட்டால் வருமோ இதம்

இதை யார்

கேட்டாலும் கொடுக்கமாட்டேன்

 

 

கதிர் விழைந்து வரும்

போது

அவன் கதிர் சுட்  எரித்தாலும்

ரிந்திடுமோ என் வனப்பு

நான் பட்ட  என் தின

உழைப்பு

அரிவு வெட்டிப் போடையிலே- சிறு

 

 

குருவி வந்து

பொறுக்கினாலும்

அவன் படைப்பல்லவா...!

கொடுக்கும் மனம் வேணுமடா

அருவி தந்த கொடைப் பயனால்

அரிவு வெட்டுகிறோமே - என்று

நாவிற்கூட நினையா விடில்

நாலும் கற்று

பயனெதுவோ..!

 

 

மாலை வீடு திரும்பவென்றால்

மருத நில

மக்கள் தானே நாம்- அங்கு

ஊடல் கூடு கட்டி குஞ்சும் பொருத்து

இருக்கும் அவள் மனதில்

காட்டிட முடியாத தவிப்பொன்று

வந்திருக்கும் இல்லை

வெந்திருக்கும்

 


நான் கைந்து பிள்ளைகளும் -அவள்

தனம் போல் நிறைந்திருக்க

குறைத்து விட்டால்

சமூகம்

குறை கூறி விடுமோ என் றுமொரு

குற்றம் மனப் பாட்டில்

குறை கூற

விடவில்லை பெற்றெடுத்த தவப் புதல்வர்  ஜவர் சூழந்திருப்பர்

பாண்மைக்கு - நான்

ஏன் பதற…!

 

 

கட்டிவந்த மனைவி கட்டி அணைக்க காத்திருக்க

அவள் தந்த

பிள்ளைகள் முத்தமிட பார்த்திருக்க

நான் நிற்கும் என் துரவு - என்

பிரிவில்  பனிச் சிந்த

இத்தனை உறவெனக்கு - அதில்

எத்தனை மனச்

சுகமிருக்கு அத்தனை தான்

சொத்தெனக்கு.                                                                                                 முல்லைக்கேசன்
 

 

 

பாவம்

 
திண்ணையில்

குந்தியிருந்து கூரையின்

யன்னல் வளியே

கார் மேகத்தைப் பார்த்தபோது 

தான் நானும்

பிரசவித்தேன் - என்

கர்வத்தை

பாவம் அதுவும் 

என்னைப் போல் கிழிந்த

சட்டையில்

குதூகலித்துக் கொண்டு

தன்னவளை

கட்டித் தரணியெல்லாம்

பன்னீர் தெளிப்பதை.

 
                                                                                              முல்லைக்கேசன்

 

கவிதைச் சரம்

 

கவிதைச் சரம் தொடுக்க

அரிச்சுவடி

எடுத்து வந்து

அகரமெல்லாம் தொலைத்துவிட்ட

இலக்கியப்

பிச்சைக் காரனாய் இன்று

 


சகத்தினை அழிக்கக் கண்டும்

சத்தியங்கள் சிதறக்

கேட்டும்

இடது கையால் இறைவன்

கிறுக்கி விட்ட தலையெழுத்தை

மறந்துவிட

நாம் மரங்கள் அல்லவே

 


உள்ளமே உலையில் வேகக் கண்டும்

ஊரெல்லாம்

உழுத்துப் போகக்

கண்டும் நான் மட்டும்

வெளிநாட்டில் வாழ நான்

என்ன

வெள்ளைக் காரனுக்கு

வெள்ளாவி வைப்பவனா?

 
                                                                                              முல்லைக்கேசன்
 
 

விட்டில்கள்

விளக்கில் மறைந்த விடிட்டில்களும்

விடியலே காணாத ஈசல்களும்

தீயில் மறையும் மெழுகு

வர்த்தியும்

தீயிலே பிறக்கும் தீ

குச்சியும்

வாழ்வென்ற படகேறி வலித்தேனும்

கரைசேர லாமே -என்று

துடுப்புக்களை உதைத்து

உதைத்தே

உடைந்து விட்டும் உடைந்ததைக்

கொண்டும் உன்னிப்

பார்க்கிறோம்

வலித்து வலித்து தும்புகளாய்

திரிந்த துடுப்புக்களாலும்

வலித்தாலும் உரு

குலையாத நெஞ்சம் கொண்டும்

விழுகின்ற அடிகளைப்

படிகளாய் கொண்டு

சுவடுகளின் அசைவுகளை

தொடர்கிறோம்

மனமிடமின்றியும் மனதிடம்

கொண்டும்

மடியும்

தருவாயிலும் இடிகின்ற

கோபுரங்களாய்

அலைகின்றோம்.


                                                                                                          முல்லைக்கேசன்

 
 
 


 

 

2 கருத்துகள்:

முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....

ஈழத்து மண்ணின் வாசங்கள் வீசும் தமிழ்க் கவிதைகளை இத் தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். என் போன்று வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு தங்கள் ஆதரவுகள் இன்றியமையாதவை. இன் முகத்துடன் உங்கள் முல்லைக்கேசனாய்...

தொடர்புகட்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *