வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கிழித்த மார்புகள்


எம் மார்புகள் கிழித்த சன்னங்களுக்கு உடனே

மருந்துகள் போடுங்கள்

 
ஏனென்றால்

நாம் மனிதர்கள் அல்லர் வீர

மறவர்கள்

ஈழத்தின் வீரத் தமிழர்கள்நெல்லரிசிச் சோற்றுக்கும் 

நெய்விட்ட

தோசைக்கும்

வயிற்றை வாடகைக்கு

தந்தவர்கள் தினம் நெருப்புக் குழம்புகளை

பிசைந்து தின்றவர்கள்

மானத் துணிகளில் விசிறிக் கோவணங்கள்


கட்டியவர்கள்

அதனால்த் தான் புழுங்கினேன்

சன்னங்களின் ஜீவனுக்காய்

மருந்துகள் போடென்று - பார்

என் நெஞ்சுகள் கிழித்திருக்கும்

நீலமும்

பாரித்திருக்கும்.


முல்லைக்கேசன்

புதன், 28 ஆகஸ்ட், 2013

யாசகம்என் இளவட்டங்கள் எல்லாம்

போதையின்

மடியில் இள நெஞ்சுகளைத்

தாலாட்டியபடியே

தங்கக் குவளைகளுக்கு தாம்பூலம்

பூசிக்கொண்டு

உறங்குகிறார்கள்

நான் மட்டும் பேதையின் அடியில்

ஏனெனில்

உன்னைக் காணும் போதெல்லாம்

என்

மொழித் தேசத்தில்

வார்த்தைக்கு பஞ்சம்

ஏற்பட்டு வீதியோரங்களில் எல்லாம்

யாசகம் செய்ய

தொடங்கி விடுகிறது என்

நா - நான் ஏது செய்ய

இருக்கின்ற ஒன்றிரண்டும்

இமைகின்ற பொழுதில்

திர்ந்து விடுகிறதே

இறைவா...!முல்லைக்கேசன்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

தேசப்படங்கள்

தந்திகள் அறுந்த வீணைகளை பெரு

விரல்களின் நுணிகளால்

தடவிப் பார்த்துக்

கொண்டே

கடந்த காலத் தாள்களின்

கரைந்து கொண்ட முற்றுப் புள்ளிகளுக்கு

கண்மைகளைத் தடவித்

தடவி  தடயங்களை மீட்டுக்

கொண்டிருந்தேன்வேலிகள் பறித்த பயிர்களையும்..!

தாலிகள் அறுத்த உயிர்களையும்..!

மாலைகள் அறுத்த சோலைகளையும்..!

ஆவிகள் குடித்த ஆலைகளையும்..!

அருவிகள் இழந்த ஆறுகளையும்...!

விடலைகள் தொலைத்த மாதுகளையும்...!

இளமைகள் தொலைத்த கிழவிகளையும்...!

படலைகள் இழந்த வளவுகளையும்...!

கற்பங்கள் தொலைந்த கன்னிகளையும்...!புழுதி படிந்த தேசப்படங்களில்

தடவிப் பார்த்து என்

தேசங்களை

அடையாளம் காண நேருமென்று

நான்

இதுவரை எண்ணியதில்லை

என் பாட்டனும் சொன்னதில்லை.முல்லைக்கேசன்

களரிகள்

களரிகள்


எடுத்தெறியும் சொல்லில்

இழுத்தெடுக்கும் அர்த்தம் வாழ்வை

தகர்க்கின்ற கணைகள்

உள்ளம் என்றும்

தணியாத வெள்ளம்

எதுகை மோனையெல்லாம்

எனக்கெதுக்கடி

அத்தனையும் இன்னும் என்னில்

நெருக்கடி

எதுகையும் மோனையும்

ஏட்டிக்குப் போட்டி

அத்தனையும் ஒன்றாய் தந்தது

ஓரிடிஅர்த்தங்கள் தொலைத்துவிட்ட

அதிசயப் பக்கம்

அவை அத்தனையும் தந்தது

நெஞ்சில்

ஒர் ஏக்கம்

தனி நாடு வேண்டுமென்று

தலைகீழாய் நின்றோம்

தணலும் வேகுமென்று

வெறி வீரம்

கொண்டோம்வேட்டி கட்டிப் பார்க்கவென்ற

வீராப்புப் பேச்சு -பாவம்

கோவணமும்

அவிழ்ந்து போன

கதி கெட்ட போக்கு

நாம் கையிழந்த கற்புக்கள்

இல்லை

கலையிழந்த

களரிகள்.


முல்லைக்கேசன் 

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

கவிதைகள்

கன்னிக்கவிஞனுக்கு


பல ஆண்டுக் கனவொன்று

நொடியொன்றில் நிறைவேறி அதனது

துண்டொன்று அடி நெஞ்சில்

வரைந்து விட்ட

இதமான கீறலொன்றால்

இள மனசின் சிறு கூடு

சிதறிச் சிதைந்து போயும்

சிக்கிச் சிதை குலைந்து

கசிகின்ற சென்னீரில்

கனத்துப் போயிற்று

என் மனம் .........!

கனவுக்கு கற்பம்

தரிக்க வைக்க இந்த கவிஞனுக்கும்

அவன் பிரசவித்த கவிகளுக்கும்

என்ன ஒரு

மறவீர உறவொன்று

பிறப்பிலேயே இருந்த

இருந்த  தென்று

புலமைக்கு தெரிந்த போது

முல்லைக்கேசன்

ஈழத்து மண்ணின் வாசங்கள் வீசும் தமிழ்க் கவிதைகளை இத் தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். என் போன்று வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு தங்கள் ஆதரவுகள் இன்றியமையாதவை. இன் முகத்துடன் உங்கள் முல்லைக்கேசனாய்...

தொடர்புகட்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *